சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா: மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளை உலகிற்குப் பறைசாற்றும் தளம்

11 மே 2026, 6:15 AM
சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா: மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளை உலகிற்குப் பறைசாற்றும் தளம்

ஷா ஆலாம், மே 11: சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளை முன்னிலைப்படுத்தி, உள்ளூர் சமையல் அடையாளத்தை வலுப்படுத்தும் முக்கியத் தளமாக 'சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா' (Festival Makanan Mega Selangor) உருவெடுத்துள்ளது.

இத்திருவிழா குறித்து 'டூரிசம் சிலாங்கூர்' (Tourism Selangor) தலைமைச் செயல் அதிகாரி சுவா யீ லிங் கூறுகையில், பாரம்பரிய உணவுகள், நவீன உணவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமான உணவுகள் என 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழில்முனைவோரை இத்திருவிழா ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, புந்தேன் (Punten), நாசி அம்பெங் (Nasi Ambeng) மற்றும் சாத்தே காஜாங் (Sate Kajang) போன்ற சிலாங்கூரின் அடையாளமாகத் திகழும் உணவுகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. "நாங்கள் நவீன உணவுகளுக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தைப் பாரம்பரிய உணவுகளுக்கும் வழங்குகிறோம். உணவின் சுவையைத் தாண்டி, அதன் பின்னணியில் உள்ள வரலாறு மற்றும் பாரம்பரியத்தையும் வருகையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

சாதாரண உணவுத் திருவிழாக்களைக் காட்டிலும், பாரம்பரிய உணவுகளை மையப்படுத்திய இம்முயற்சிக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் விளக்கினார். மேலும், இந்தத் தளம் தொழில்முனைவோர் தங்களுக்குள் ஒரு வணிக வலையமைப்பை உருவாக்கவும், சந்தைப்படுத்தல் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பயண முகவர்களுடன் இணைந்து இத்திருவிழாவை ஒரு முக்கிய சுற்றுலா அங்கமாக மாற்றவும் 'டூரிசம் சிலாங்கூர்' திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் அடுத்தக்கட்ட உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.