ஷா ஆலம், மே 3: செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS) அதன் நிர்வாகப் பகுதிகளில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுதல் மற்றும் தொடர்ச்சியான கழிவுப் பிரச்சினைகளைக் கையாளும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, மூடிய சுற்று தொலைக்காட்சி (சிசிடிவி) பயன்பாட்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
'தி ஸ்டார்' அறிக்கையின்படி, செலாயாங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஷாமான் ஜலாலுடின், கடந்த மாதம் மூன்று நாட்கள் நடைபெற்ற உள்ளகப் பயிலரங்கில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டதாகக் கூறினார். இதில் பல்வேறு MPS துறைகள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த அமர்வின் போது, களத்தில் உள்ள நடைமுறைச் சவால்கள் மற்றும் குறுகிய, நடுத்தர, நீண்ட காலத் தீர்வுகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தப்பட்டது.
“இந்தப் பயிலரங்கம் களத்தில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய பல்வேறு தீர்வுகளை உருவாக்கியுள்ளது,” என்று அவர் மன்றத்தின் முழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
பரிந்துரைக்கப் பட்ட நடவடிக்கைகளில், சிசிடிவி கவரேஜை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும், அந்த அமைப்பை எம்.பி.எஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் மிகவும் திறம்பட ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஷாமான் வலியுறுத்தினார்.
"கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை மேம்படுத்துவதற்காக சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் அவற்றை எம்.பி.எஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பது முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, அமலாக்கப் பிரிவு, குறிப்பாக எம்.பி.எஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, பணியாளர்கள் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்கிறது.
“செலாயாங்கில் 700,000 மக்கள் வசிக்கின்றனர். பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், நகராண்மைக் கழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் எங்களால் கண்காணிக்க முடியவில்லை,” என்றார்.
அதே நேரத்தில், அமலாக்கத் திட்டத்தை முடிவு செய்வதற்கு முன், முன்மொழிவுகளின் சாத்தியக்கூறுகளை மன்றம் மதிப்பிட்டு வருகிறது.
"பரிந்துரைகளை இறுதி செய்யவும், செயல் படுத்தத் தேவையான வரவு செலவுத் திட்டத்தை முடிவு செய்யவும் அடுத்த வாரம் ஒரு தொடர் கூட்டம் நடைபெறும்," என்று அவர் கூறினார்.
அமலாக்கத்தைத் தவிர, பொது விழிப்புணர்வு முயற்சிகளை எம்.பி.எஸ் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், கழிவு தொடர்பான பிரச்சினைகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க உள் செயல்முறைகளை மேம்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முக்கிய பண்டிகைகளின் போது கழிவுகள் அதிகரித்ததால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஷாமான் கூறினார்.
"தைப்பூசம், சீனப் புத்தாண்டு மற்றும் ஹரி ராயா நோன்புப் பெருநாள் போன்ற பண்டிகைகளின் காரணமாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கழிவு தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன," என்றார்.
செயல்படுத்தப்பட உள்ள நடவடிக்கைகள் சட்டவிரோத குப்பை கொட்டுவதைக் கட்டுப்படுத்துவதோடு, செலாயாங்கில் ஒட்டுமொத்த தூய்மை அளவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எம்.பி.எஸ் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 264 வழக்குகளுடன், 2024-இல் 501 வழக்குகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 58 அபராதங்கள் (compounds) விதிக்கப் பட்டுள்ளன.
இதுவரை, ரவாங், கோம்பாக், பத்துமலை மற்றும் தாமான் செலாயாங் ஜெயா உள்ளிட்ட 12 இடங்களில், குப்பைகள் அதிகம் கொட்டப்படும் இடங்களாக அடையாளம் காணப்பட்டு சிசிடிவி அலகுகள் நிறுவப் பட்டுள்ளன.
இதற்கிடையில், வார்டு 3-க்கான மன்ற உறுப்பி-னர் மஸ்லான் மூசா, கேடிஇபிடபிள்யூஎம்-ஆல் நியமிக்கப்பட்ட குத்தகைதாரர்கள், உள்ளூர் மன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, தடையற்ற செயல்பாடுகளையும், திறமையான சேவை வழங்கலையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டவிரோத குப்பை கொட்டும் பிரச்சினைக்குத் தீர்வு காண சிசிடிவி பயன்பாட்டை MPS விரிவு படுத்தும்
3 மே 2026, 4:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுக்மா தளங்களில் தூய்மையைப் பேண KDEBWM நிறுவனம் RM240,000 ஒதுக்கீடு
Sofia Nasir
22 ஆகஸ்ட் 2026

selangor
KDEBWM: சிலாங்கூர் மக்களிடையே குப்பைகளைப் பிரித்தெடுக்கும் விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது
Shalini Rajamogun
27 ஜூலை 2026

national
விசாகத் தினத்தில் சீரான குப்பைச் சேகரிப்பு: ஒன்பது உள்ளூராட்சி மன்றங்கள் 100 சதவீத இலக்கை அடைந்தன
Shalini Rajamogun
4 ஜூன் 2026

selangor
பண்டான் இண்டா பகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வாக வடிகால் மேம்பாட்டு திட்டம்
Shalini Rajamogun
6 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



