சிலாங்கூர் சுல்தான் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்

30 ஏப்ரல் 2026, 3:24 AM
சிலாங்கூர் சுல்தான் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்
சிலாங்கூர் சுல்தான் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்
சிலாங்கூர் சுல்தான் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்
சிலாங்கூர் சுல்தான் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்

ஷா ஆலாம், ஏப்ரல் 30 - மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரியை இஸ்தானா புக்கிட் காயாங்கானில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் தேசிய விளையாட்டு மன்றத்தின் (MSN) தலைமை இயக்குநர் ஜெஃப்ரி ஙடிரினும் உடனிருந்தார்.

சிலாங்கூர் ஏற்று நடத்தவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (சுக்மா) ஏற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப் பட்டது.

சிலாங்கூர் அரச குடும்ப அலுவலகத்தின் (Selangor Royal Office) முகநூல் பதிவின் படி, இந்தச் சந்திப்பின் முடிவுகள் குறித்து மாட்சிமை தங்கிய சுல்தான் மகிழ்ச்சி தெரிவித்தார். தற்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, ஏற்பாட்டாளர்கள் செலவுகளைக் குறைக்கும் சிக்கனமான அணுகுமுறையைக் கையாள்வதில் அவர் திருப்தி தெரிவித்தார்.

"சந்திப்பின் முடிவில் சுல்தான் மகிழ்ச்சி அடைந்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு செலவினங்களைக் குறைப்பதற்கான ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கையில் அவர் திருப்தி கொண்டுள்ளார்," என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

அதே வேளையில், இந்த முறை சுக்மா ஏற்பாடுகளுக்கான ஒவ்வொரு செலவும் அத்தியாவசியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாட்சிமை தங்கிய சுல்தான் வலியுறுத்தினார்.

"உள்நாட்டு அளவில் விளையாட்டு மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு செலவும் அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதை மாட்சிமை தங்கிய சுல்தான் வலியுறுத்தினார்," என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.