ஷா ஆலம், ஏப்ரல் 23: டீசல் விலை உயர்வால் மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிகளில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறுகையில், நிறுவனத்தின் வருவாய் அப்படியே இருக்கும் நிலையில், செயல்பாட்டுச் செலவினங்களின் அதிகரிப்பை ஈடுகட்ட சிறந்த தீர்வைக் காண்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என்றார்.
"செலவுகளை சமநிலைப்படுத்த சிறந்த முறையை ஆராய அனைத்து பங்குதாரர்களுடனும் KDEBWM நிர்வாகம் ஒரே மேசையில் அமர்ந்து விவாதிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"டீசல் விலை மீண்டும் சீராகும் வரை இந்த உயர்வை தற்காலிகமாக ஏற்கும் ஒவ்வொரு தரப்பினரின் திறனையும் ஆராய்வதே முக்கிய நோக்கம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
தற்போது, சுமார் 850 (RORO) வகை லாரிகளை உள்ளடக்கிய டீசல் செலவுகள் மாதத்திற்கு ரிம4 மில்லியன் வரை அதிகரித்துள்ளதால், KDEBWM பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செலவுப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், அது களத்தில் குப்பை சேகரிப்பு பயணங்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ரம்லி கூறினார்.
"உதாரணமாக, ஒரு நாளைக்கு மூன்று பயணங்களிலிருந்து இரண்டு பயணங்களாகக் குறைக்கப்படலாம். இது நிச்சயமாக சேவையின் திறனை நேரடியாகப் பாதிக்கும்," என்றார்.
முன்னதாக, உலகளாவிய எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, குப்பைகளை அகற்றும் பணிகள் தடையின்றி சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய KDEBWM நிறுவனத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாக உள்ளூராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறியிருந்தார்.
மாநில அரசிடம் இது தொடர்பான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்தப் பொதுப்பணி நிறுவனம் எதிர்கொள்ளவிருக்கும் நிலைமை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விளக்கத்தையும் அளித்திருப்பதாகவும் சுய் லிம் தெரிவித்திருந்தார்.
டீசல் விலை உயர்வு– செயல்பாடுகளைத் தொடர KDEBWM தீவிரம்
23 ஏப்ரல் 2026, 2:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் உள்ள சுமார் 100 பாரம்பரிய கிராமங்களில் இன்னும் முறைப்படுத்தப்பட்ட திடக்கழிவு சேகரிப்பு சேவை வழங்கப்படவில்லை
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
விசாகத் தினத்தில் சீரான குப்பைச் சேகரிப்பு: ஒன்பது உள்ளூராட்சி மன்றங்கள் 100 சதவீத இலக்கை அடைந்தன
Shalini Rajamogun
4 ஜூன் 2026

selangor
சுக்மா தளங்களில் தூய்மையைப் பேண KDEBWM நிறுவனம் RM240,000 ஒதுக்கீடு
Sofia Nasir
22 ஆகஸ்ட் 2026

selangor
KDEBWM: சிலாங்கூர் மக்களிடையே குப்பைகளைப் பிரித்தெடுக்கும் விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது
Shalini Rajamogun
27 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



