கோலாலம்பூர், ஏப்ரல் 20: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு இன்று திங்கட்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில் ஏறக்குறைய சீராகவே இருந்தது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், மூலதன மதிப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக அமெரிக்க நாணயம் பார்க்கப்படுகிறது.
காலை 8 மணியளவில், உள்ளூர் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக, கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இருந்த 3.9505/9545 இலிருந்து 3.9520/9600 ஆக சரிந்தது.
பேங்க் முவாமலாட் மலேசியா பெர்ஹாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்சானிசாம் அப்துல் ரஷீத் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மற்றும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு முறையே 7.29 விழுக்காடு மற்றும் 6.07 விழுக்காடு உயர்ந்து, US$89.96 மற்றும் US$95.87 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
"ஈரான் அரசாங்கம் சனிக்கிழமையன்று ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அது மீண்டும் மூடப்பட்டது," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
அமெரிக்க டாலர் குறியீடு (DXY) இன்று காலை 0.19 விழுக்காடு அதிகரித்து 98.282 புள்ளிகளை எட்டியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எனவே, இன்று ரிங்கிட் மதிப்பு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வார கால போர் நிறுத்தம் இந்த வாரம் முடிவடைய உள்ளதால், கால அவகாசம் குறைந்து வருகிறது."
"அதிகமான தூதரகப் பேச்சுவார்த்தைகளை நடத்த இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பதே தற்போதைய கவலையாக உள்ளது. சந்தை இடர் தவிர்ப்பு மனநிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் அவர்.
வர்த்தகத் தொடக்கத்தில், உள்ளூர் நாணயம் இதர முக்கிய நாணயங்களுக்கு எதிராக வலுவாக வர்த்தகம் செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் பவுண்ஸிற்கு எதிராக ரிங்கிட் 5.3454/3508 இலிருந்து 5.3289/3397 ஆகவும், யூரோவிற்கு எதிராக 4.6588/6635 இலிருந்து 4.6412/6506 ஆகவும், ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.4838/4865 இலிருந்து 2.4832/4884 ஆகவும் வலுவடைந்தது.
ஆசியான் நாணயங்களுக்கு எதிராக உள்ளூர் நாணயம் கலவையான வர்த்தகத்தைக் கண்டது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.1053/1086 இலிருந்து 3.1033/1100 ஆக உயர்ந்தது. தாய்லாந்து பாட்டிற்கு எதிராக 12.3084/3274 இலிருந்து 12.3096/3418 ஆகவும், இந்தோனேசியா ரூபியா விற்கு எதிராக 229.8/230.1 இலிருந்து 229.9/230.4 ஆகவும் சரிந்தது. பிலிப்பைன்ஸ் பேசோவிற்கு எதிராக 6.58/6.59 என்ற நிலையில் இருந்து 6.58/6.60 ஆக சீராக இருந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு மாற்றமின்றி நிலையாகத் தொடங்கியது
20 ஏப்ரல் 2026, 5:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ரிங்கிட் அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.95 அளவில் நிலையானதாக இருக்கும்
Pakiya
21 மார்ச் 2026

national
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
Shalini Rajamogun
13 பிப்ரவரி 2026

national
அவதூறு வழக்கு: ரிங்கிட் 8,320 நீதிமன்றச் செலவை கெப்ரைஸ் செலுத்தினார்
Mavitthran
23 ஜனவரி 2026

national
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் புதிய ஐந்து ஆண்டு உச்சத்தை எட்டியது
Pakiya
26 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




