அவதூறு வழக்கு: ரிங்கிட் 8,320 நீதிமன்றச் செலவை கெப்ரைஸ் செலுத்தினார் 

23 ஜனவரி 2026, 6:50 AM
அவதூறு வழக்கு: ரிங்கிட் 8,320 நீதிமன்றச் செலவை கெப்ரைஸ் செலுத்தினார் 
அவதூறு வழக்கு: ரிங்கிட் 8,320 நீதிமன்றச் செலவை கெப்ரைஸ் செலுத்தினார் 

கோலாலம்பூர்,ஜனவரி 22 –சமூக ஊடகபிரபலம் கெப்ரைஸ், அவதூறு வழக்குஒன்றில் தொழிலதிபர் ஒருவருக்கு செலுத்த வேண்டிய ரிங்கிட் 8,000 செலவுத்தொகையையும், கூடுதல் கட்டணமாக ரிங்கிட் 320-ஐயும் இன்று செலுத்தி கணக்கைத் தீர்த்தார். 

நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியத் தவறியதால், உயர் நீதிமன்றம் பறிமுதல் மற்றும் விற்பனை ஆணையைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப் பட்டது.  கப்பல்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டத்தோ ஸ்ரீ ஆர். ஜெயேந்திரனைப்பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் முனியாண்டி வேதநாதன், கெப்ரைஸ் என்ற இயற்பெயர் கொண்ட அரிஸ் ரம்லி, முழுத் தொகையையும் தனது சட்ட நிறுவனத்தின்வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதை உறுதிப்படுத்தினார். 

"கெப்ரிஸிடமிருந்துநாங்கள் மொத்தம் ரிங்கிட் 8,320 பெற்றுள்ளோம்.நீதிமன்ற உத்தரவு என்பது ஒரு பரிந்துரை அல்ல. நீதி, ஒழுங்கு மற்றும் சட்ட அமைப்பின் முறையானநிர்வாகத்தை உறுதி செய்வதற்கான ஒரு கட்டுப்படுத்தும் உத்தரவாகும் அது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படி வயதாகும்,"என்று அவர் கூறினார்.  

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.