சபாக் பெர்ணம், ஏப்ரல் 26: இங்குள்ள தாமான் ஆயர் மானிஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ரூமா இடாமான் காசே’ திட்டம், மலிவு விலையில் முதல் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதன் எளிதான மற்றும் விரைவான விண்ணப்ப செயல்முறை பலரையும் கவர்ந்துள்ளது.
தங்கள் முதல் வீட்டின் சாவியைப் பெற்ற பல இளைஞர்கள், இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் கனவு நனவானதையிட்டு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். இது அவர்களின் எதிர்கால குடும்ப வாழ்க்கையைத் திட்டமிட பெரிதும் உதவுவதாகவும் அவர்கள் கூறினர்.
சுங்கை பெசாரைச் சேர்ந்த குடோவுன் மேலாளர் ஓங் ஸி சுவான், 24, இந்தத் திட்டத்தின் மூலம் இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் தனது கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறினார்.
குறைந்தபட்ச ஆவணங்களுடன் எளிதான முறையில் வாங்குவதற்கான நடைமுறைகள் இருந்ததால், ஒப்புதல் செயல்முறை விரைவாக முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“மாதாந்திர கட்டணமும் மிகவும் குறைவு. இது இளைஞர்கள் ஒரு வீட்டை வாங்குவதற்கும், தங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது.”
“இந்த இடாமான் வீடு விசாலமாகவும், வசதியாகவும், சிறந்த வசிப்பிடக் கருப்பொருளுடனும் வடிவமைக்கப் பட்டுள்ளதால் குடும்பத்துடன் வாழ்வதற்கு மிகவும் ஏற்றது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
முதல் வீடு வாங்குவதில் பல இளைஞர்கள் இன்னும் சிரமங்களை எதிர்கொள்வதால், இதுபோன்ற திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கணக்கு உதவியாளரான டான் காய் டிங், 23, தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது, தனது நிதியை சிறப்பாகத் திட்டமிட உதவுவதாகக் கூறினார்.
வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற மலிவு விலையில் இந்தத் திட்டம் அமைந்திருப்பது சரியான தேர்வாக அமைந்தது என்றார் அவர்.
“சந்தையில் வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், என் நண்பர்கள் பலரால் இன்னும் வீடு வாங்க முடியவில்லை.”
“சிலாங்கூர் அரசாங்கம் இதுபோன்ற ‘ரூமா இடாமான்’ திட்டங்களை மேலும் பல இடங்களில் செயல்படுத்தினால், இன்னும் அதிகமான இளைஞர்கள் மலிவு விலையில் சொந்த வீடுகளைப் பெற வாய்ப்பு கிடைக்கும்,” என்றார் அவர்.
நிர்வாக உதவியாளரான முகமட் ரிட்சுவான் முகமட் ஹல்மி, தனது வீட்டு விண்ணப்பம் இவ்வளவு குறுகிய காலத்தில் அங்கீகரிக்கப் படும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட விண்ணப்பம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது, இது திறமையான மற்றும் ஒழுங்கான செயல்முறைக்குச் சான்றாகும் என்று அவர் கூறினார்.
“இந்த வீட்டின் விலை மிகவும் மலிவானது மற்றும் மாதாந்திர கட்டணமும் குறைவு, இது நடுத்தர வருமானம் பெறும் பிரிவினருக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.”
“ரூமா இடாமான் திட்டம் உண்மையிலேயே மக்களுக்குச் சொந்த வீடு வாங்க உதவும் ஒரு மலிவு விலை திட்டமாகும்,” என்றார்.
மேலும், இதுபோன்ற வீட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்களை மாநில அரசு பரவலாக விளம்பரப் படுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘ரூமா இடாமான் காசே’ திட்டம், மலிவு விலையில் முதல் வீட்டை சொந்தமாக்க இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு
26 ஏப்ரல் 2026, 6:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வாடகைக்குப் பின் வீட்டை வாங்கும் ''சிலாங்கூர் மக்கள் சொந்த வீடு திட்டம்'' வழிவகுக்கிறது
Pakiya
19 ஏப்ரல் 2026

selangor
கிள்ளான் பண்டமாரான் தொகுதி மூத்த குடிமக்கள் மெஸ்ரா உசியா இமாஸ் (SMUE) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பற்றுச் சீட்டுகளை உடனே பெற்றுக் கொள்ள நினைவூட்டப் படுகிறது
Pakiya
30 மார்ச் 2026

---
Seluruh Selangor nikmati bas percuma, Julai ini
admin
1 பிப்ரவரி 2016
---
Isu Cukai Taksiran : ‘Apa Nak Jadi Dengan Kerajaan Selangor’
Unknown Author
28 ஜனவரி 2016
உங்கள் கருத்து என்ன?




