கோல சிலாங்கூர், ஏப்ரல் 18: பள்ளிப் பருவம் தொடங்குவதை முன்னிட்டு, குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இந்த ஆண்டு 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் (DUN) செயல்படுத்தப்பட்ட 'பள்ளிக்குத் திரும்பும்' திட்டத்தின் கீழ் மொத்தம் 16,800 மாணவர்கள் பயனடைந்தனர்.
சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளையின் (MBI) தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நூர், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 300 மாணவர்கள் வீதம், மொத்தம் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
"நிதிப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல், மாணவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தை மிகவும் வசதியாகத் தொடங்குவதை உறுதி செய்வதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது," என்றார்.
"மக்களின் கல்வி நலனைப் பாதுகாப்பதில் மாநில அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இன்று இங்குள்ள சுங்கை புரோங் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சமூகச் சேவை மையத்தில் நடைபெற்ற 'பள்ளிக்குத் திரும்பும்' உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
அவரது கூற்றுப்படி, சுங்கை புரோங் சட்டமன்றத் தொகுதியில் 300 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற்றனர்.
"மாநில அரசு நகர்ப்புறம் அல்லது கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி இதுபோன்ற திட்டங்களை எப்போதும் செயல்படுத்தி வருகிறது."
"இங்குள்ள ஒருங்கிணைப்பாளருடன் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இப்பகுதியில் பல்வேறு முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் நாங்கள் எப்போதும் முனைப்புடன் இருக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், சுங்கை பூரோங் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மருவான் அகமது, இந்த முயற்சி தேவையிலுள்ள குடும்பங்களுக்கு, குறிப்பாக பள்ளித் தயாரிப்புச் செலவுகளை எதிர்கொள்வதில் பெரும் நிம்மதியை அளிப்பதாகக் கூறினார்.
"பெற்றோரின் சுமையைக் குறைக்கவும், மாணவர்கள் பள்ளிப் பருவத்தைத் தொடங்க தயாராக இருப்பதை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப் படுகிறது," என்றார் அவர்.
'பள்ளிக்குத் திரும்பும்' திட்டம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் பள்ளித் தயாரிப்புகளுக்கு உதவும் வருடாந்திர முயற்சிகளில் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம், அனைத்து சமூகத்தினருக்கும் உள்ளடக்கிய மற்றும் விரிவான கல்வியை உறுதி செய்வதில் மாநில அரசு தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.
அதே நிகழ்வில், சுங்கை பூரோங்கில் புயலால் பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கு தலா 1,000 ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், ஜெராமில் நடைபெற்ற ஒரு தனி நிகழ்வில், மேலும் 18 பாதிக்கப்பட்டவர்களுக்கு இதே போன்ற உதவி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் (DUN) 'பள்ளிக்குத் திரும்பும்' திட்டத்தின் கீழ் 16,800 மாணவர்களுக்கு பயன்.
19 ஏப்ரல் 2026, 2:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மத்திய கிழக்கு நெருக்கடியால் மாநில அரசின் சிக்கன நடவடிக்கைகளில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலம் புறக்கணிக்கப்பட மாட்டாது.
Pakiya, Siti Rohaizah Zainal
5 ஏப்ரல் 2026

selangor
கிள்ளான், தாமான் மேரு மாமூரில் உள்ள வீடமைப்புப் பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழ் (CCC) கிடைக்கவில்லை மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீத்
Pakiya, Dewi Abdul Rahman
4 ஏப்ரல் 2026

---
53 penerima gembira terima bantuan rumah Program Kerajaan Prihatin
admin
2 ஏப்ரல் 2014
video
Yayasan MBI opens applications for school aid
Kathiravan Manoharan
27 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




