கிள்ளான், தாமான் மேரு மாமூரில் உள்ள வீடமைப்புப் பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழ் (CCC) கிடைக்கவில்லை மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீத்

4 ஏப்ரல் 2026, 2:33 AM
கிள்ளான், தாமான் மேரு மாமூரில் உள்ள வீடமைப்புப் பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழ் (CCC) கிடைக்கவில்லை மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீத்

கிள்ளான், ஏப் 4, கிள்ளான், தாமான் மேரு மாக்மோரில் உள்ள வீடமைப்புப் பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழ் (CCC) கிடைக்காத விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்த மாத மாநில சட்டமன்றக் கூட்டத்தில் (DUN) இது எழுப்பப் படும்.

குறிப்பாக கழிவு
நீரகற்று அமைப்பு முறையாக அமைக்கப் படாததால், முழுமையாக முடிக்கப் படாத இத் திட்டத்தால் குடியிருப்பாளர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீத் கூறினார்.

இப்பிரச்சினையைத் தீர்க்க உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற குடியிருப்பாளர்கள் தன்னை நேரடியாகத் தொடர்பு கொண்ட பிறகு, இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"குடியிருப்பாளர்கள் இன்னும் சிசிசி (CCC) பெறவில்லை என்றும், இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல பொருத்தமான வழிகாட்டு
தலையும் உதவியையும் பெற விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தனர்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

"தங்கள் புகார்களை யாரிடம் தெரிவிப்பது, தங்களின் அவல நிலைக்கு யார் தீர்வு காண்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை," என்றார்.

எனவே, இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கொண்டு செல்வதற்கு முன், முழுமையான ஆவணங்கள் மற்றும் வழக்கின் கால
வரிசையைப் பெற, குடியிருப்பாளர்களின் நடவடிக்கைக் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"விவரமான தகவல்களைப் பெறுவதற்காக அவர்கள் என்னைச் சந்திக்கக் காத்திருக்கிறேன். அதன்பிறகு, இந்த விவகாரத்தை சட்டமன்ற விவாதத்தில் எழுப்புவேன்."

"பொதுவாக, ஒரு பிரச்சினை சட்டமன்றத்தில் எழுப்பப்படும்போது, ​​அதைத் தொடர்ந்த நடவடிக்கைகள் விரைவு
படுத்தப்பட்டு, ஒரு முழுமையான தீர்வை எட்ட முடியும்," என்று அவர் விளக்கினார்.

கூட்டாட்சி மட்டத்தில் தீர்வை விரைவு
படுத்துவதற்காக, வீடமைப்பு மற்றும் ஊராட்சி துணை அமைச்சர் டத்தோ ஐமான் அதிரா சபுவைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், குடியிருப்பாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதோடு, சிறந்த தீர்வைக் காண வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினருடனும் (EXCO) தொடர்பு கொள்ளப் போவதாக அவர் கூறினார்.

இப்பிரச்சனைக்கான முக்கிய காரணம், அசல் மேம்பாட்டாளர் கழிவுநீரகற்று அமைப்பை முழுமையாக கட்டி முடிக்கத் தவறியதே ஆகும். இந்த அமைப்பு இண்டா வாட்டர் கன்சோர்டியத்-திடம் (IWK) ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

"மேம்பாட்டாளர் இல்லாத நிலையில், கழிவுநீரகற்று அமைப்பு முடிக்கப்
படாததால், சிசிசி (CCC) பெற முடியவில்லை. குடியிருப்பாளர்கள் வீட்டுக் கடனைச் செலுத்துவதோடு, தங்கள் சொந்த கழிவுநீரகற்று அமைப்பையும் நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்," என்றார்.

இந்த நிலைமை குடியிருப்பாளர்களுக்குச் செலவுச் சுமையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வீடுகளின் நிலை குறித்தும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று அவர் கூறினார்.

இந்த வீடமைப்புத் திட்டம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகியும் சிசிசி (CCC) பெறத் தவறிவிட்டது என்று மீடியா சிலாங்கூர் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்
தக்கது.

ஒரு கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் குடியிருப்பில்
உள்ள பல கட்டங்களும் மேம்பாட்டாளர் திட்டத்தை முடிக்கத் தவறியதால் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன, இதில் கைவிடப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானமும் அடங்கும் என்று மரியம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.