செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஹஜ் மோசடி கும்பல், அனைத்துலக வலையமைப்பின் மூலம் மக்களை ஏமாற்றுகிறது

18 ஏப்ரல் 2026, 5:17 AM
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஹஜ் மோசடி கும்பல், அனைத்துலக வலையமைப்பின் மூலம் மக்களை ஏமாற்றுகிறது
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஹஜ் மோசடி கும்பல், அனைத்துலக வலையமைப்பின் மூலம் மக்களை ஏமாற்றுகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 18: ஹஜ் மோசடி கும்பல்கள் தற்போது மக்களை ஏமாற்றுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துலக வலையமைப்பைப் பயன்படுத்தி மிகவும் தந்திரமாகச் செயல்படுகின்றன.

இந்த மோசடி கும்பல்கள் முன்போல் வளமையாக செயல்
படுவதில்லை, மாறாக, பாதிக்கப் பட்டவர்களைக் குறிவைப்பதற்கு முன் விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன என்று மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் (MCPF) மூத்த துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அயூப் யாக்கோப் கூறினார்.

"மோசடிக்காரர்கள் முதலில் ஆய்வு செய்கிறார்கள். எந்தத் துறையில் ஊடுருவ முடியும் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்ற மக்களின் உணர்வுப்பூர்வமான ஆசையையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் மற்றும் உயர்ந்த நிதி மதிப்பைக் கொண்டிருப்பதால், ஹஜ் துறை அவர்களின் முக்கிய இலக்காக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கும்பல்கள் மேலும் ஒழுங்கமைக்கப்பட்டு திட்டமிடப் பட்டுள்ளன

இந்த மோசடிக் கும்பல்கள் சிக்கலான செயல்பாட்டுக் கட்டமைப்புகளுடன் உள்ளூர் மற்றும் அனைத்துலக வலையமைப்புகளை உள்ளடக்கியுள்ளதாக அயூப் கூறினார்.

"இது ஒரு நாட்டில் மட்டும் நடப்பதில்லை, பல நாடுகளை உள்ளடக்கியது. அவர்கள் மக்கள் மற்றும் நிபுணர்களை வேலைக்கு அமர்த்து
- கிறார்கள். சிலர், தாங்கள் பயன்படுத்தப் படுகிறோம் என்பதை அறியாமலேயே முகவர்களாகச் செயல்படுகின்றனர்," என்றார்.

இதில் ஈடுபடும் சில தனிநபர்கள், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணராமல் முகவர்களாக நியமிக்கப்
படுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க, இந்த மோசடி கும்பல்கள் சமயத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களையும் பயன்படுத்துகின்றன.

"மோசடிக்காரர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பெரிய பெயர்களைப் பயன்படுத்தும்-போது, மக்கள் சரிபார்க்காமல் எளிதில் நம்பிவிடுகிறார்கள்," என்றார்.

தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் மோசடிக்கு உதவுகின்றன.

செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உட்பட தொழில்
நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப மோசடி முறைகளும் உருவாகியுள்ளன என்று அயூப் கூறினார்.

"இப்போது செயலிகளை உருவாக்குவது எளிது. அதில் சில ஆவணங்கள் அல்லது உண்மைகளைப் புகுத்தி, உண்மையானது போல் தோற்றமளிக்க முடியும்."

"செயற்கை நுண்ணறிவு, பாதிக்கப்
பட்டவர்களைக் கவருவதற்காகக் குறிப்பிட்ட நபர்களின் குரலையும் முகத்தையும் பிரதிபலிக்க முடியும் என்பதால், மோசடியைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது," என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த மோசடி நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

"சிலர் பாலைவனம் வழியாக தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. பிடிபட்டால், ஹஜ் காலம் முடியும் வரை அவர்கள் தடுத்து வைக்கப்
படுவார்கள்," என்றார்.

மலிவான தொகுப்புச் சலுகை மற்றும் சுற்றுலா விசா மூலம் மக்களை ஏமாற்றுதல்

இதற்கிடையில், மலேசிய பயண மற்றும் சுற்றுப்பயண முகவர்கள் சங்கத்தின் (MATTA) ஹஜ் மற்றும் உம்ரா துணைத் தலைவர், முகமட் அஸ்ரி அப்துல் ரசாக், நம்ப முடியாத மலிவான தொகுப்புச் சலுகைகளை வழங்குவதே மோசடியாளர்களின் பொதுவான தந்திரம் என்றார்.

"பெரும்பாலான மோசடிகள் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துகின்றன. தொகுப்பு விலை மலிவாக இருக்கும், ஆனால் உண்மையில் ஹஜ் அனுமதி இருக்காது," என்றார்.

யாத்ரீகர்கள் முறையான அனுமதி இல்லாமல் மக்காவிற்குள் நுழைவதற்கு முன், இடைவழிப் பயணமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

"ஷவ்வால் மாதத்திற்குப் பிறகு யாத்ரீகர்களுக்கு இபாதா செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி, அவர்களை ரியாத் போன்ற வேறு இடங்களுக்கு இடைவழியாக அழைத்துச் சென்று, பின்னர் ஜித்தாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள்," என்றார்.

அதே நேரத்தில், போதிய அறிவின்மை மற்றும் ஹஜ் செய்ய வேண்டும் என்ற அதீத ஆசையே மக்கள் ஏமாறுவதற்கான முக்கிய காரணங்கள் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

வசதி இருந்தும், தங்கள் முறை வரும் வரை காத்திருக்க விரும்பாத சிலரும் இந்த மோசடியில் எளிதாகச் சிக்கிக் கொள்கின்றனர்.

தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துரைத்த அயூப், சம்பவம் நடந்த பிறகு விசாரணை செய்வதை விட, ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"தபோங் ஹாஜி (TH) ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போதுதான் கண்காணிப்பை எளிதாக மேற்கொள்ள முடியும். மேலும், இந்த சிக்கலைக் கண்காணிக்க ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

பள்ளி மற்றும் சமூக மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

அதே வேளையில், பணம் செலுத்துவதற்கு முன், தபோங் ஹாஜி மூலம் சலுகைகளைச் சரி
பார்க்குமாறு முகமட் அஸ்ரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

"இந்த மோசடி தொடர்ந்தால், அது யாத்ரீகர்களுக்குப் பாதிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சவுதி அரேபியாவுடனான தூதரக உறவுகளையும் பாதிக்கும்," என்றார்.

#HajiScam #PenipuanHaji #AIscam #ScammerHaji #TabungHaji #MATTA #BeAware #JanganMudahPercaya #மோசடி #ஹஜ்விழிப்புணர்வு

original news :
https://mediaselangor.com/ms/2026/04/351134

Photo link if have :

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.