புத்ராஜெயா, ஏப்ரல் 14: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்வதற்கும் ஆற்றல் சேமிப்பை செயல்படுத்துவதற்கும் ஒரு பகுதியாக, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (KPKT), அதன் உள்ளூராட்சித் துறை (JKT) மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் 400-க்கும் மேற்பட்ட குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறது.
மடாணி அரசாங்கத்தின் நீடித்த வளர்ச்சி கொள்கைக்கு இணங்க, கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட குறைந்த கார்பன் திட்டங்களை செயல்படுத்த JKT இலக்கு நிர்ணயித்துள்ளது என்று வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
"இந்த முன்முயற்சி செயலாக்கம் நாட்டின் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பது மட்டுமல்லாமல், உள்ளூராட்சி மன்றங்களின் (PBT) பயன்பாட்டுக் கட்டணங்களைக் கணிசமாகக் குறைக்கும் திறன் கொண்டது."
"கடந்த டிசம்பர் வரை, 131 சூரிய சக்தி விளக்குகள் பொருத்தும் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன, இதில் 1,992 விளக்குகள் RM15.34 மில்லியன் மொத்த மதிப்பில் அடங்கும்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், 136 ஆற்றல் திறன் கொண்ட எல்இடி விளக்குகள் பொருத்தும் திட்டங்களும் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன, இதில் 4,513 விளக்குகள் RM 22.39 மில்லியன் மதிப்பில் அடங்கும் என்று ஙா கூறினார்.
உள்ளூராட்சி மன்றங்கள், தொடர்புடைய முகமைகள் மற்றும் தொழில் துறையினருடன் உத்தி பூர்வ ஒத்துழைப்பு மூலம் பசுமை மற்றும் நிலையான தொழில்நுட்பத்தின் பயன் பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு முழுவதும் குறைந்த கார்பன் முன்முயற்சிகளின் செயல்பாட்டை KPKT தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
"குறைந்த கார்பன் மேம்பாட்டிற்கான மாற்றத்தை விரைவு படுத்துவதற்கும் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப் பாட்டிற்கு ஏற்ப இந்த முயற்சி உள்ளது," என்றார் அவர்.
நேற்று, நாடு முழுவதும் உள்ள 156 உள்ளூராட்சி மன்றங்களை எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஆறு உடனடி நடவடிக்கைகளைச் செயல் படுத்தும்படி KPKT ஓர் அறிக்கையை வெளியிட்டது.
மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளில் KPKT தீவிரம்: இந்த ஆண்டு 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவு
14 ஏப்ரல் 2026, 9:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுங்கை பூரோங் கடற்கரையில் 405 கிலோகிராம் குப்பைகள் அகற்றம்; 200 மரக்கன்றுகள் நடப்பட்டன
Shalini Rajamogun
15 ஜூன் 2026

selangor
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அமைச்சரவை பரிசீலனை
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
11 ஜூன் 2026

selangor
3 லட்சம் ரிங்கிட் செலவில் பத்தாங் காலி பொதுச் சந்தை புதுப்பொலிவு பெற்றது
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
வணிக வளாகங்களில் மறுசுழற்சி வசதிகள் இந்த மாதம் முதல் கட்டாயம்: கேபிகேடி (KPKT) அறிவிப்பு
Shalini Rajamogun
7 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



