ஷா ஆலம், ஏப்ரல் 13: நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள தொழுகைக்கூடத்திற்கு முன்பாக இரு மாணவியரை மோதித் தள்ளியதில் ஒன்றாம் படிவ மாணவி ஒருவர் மரணமடையக் காரணமான ஆசிரியர், இன்று காலை கோத்தா பாரு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
57 வயதான அப்பெண் ஆசிரியர், இன்று காலை 8.40 மணியளவில் காவல்துறை டிரக்கில் காவல்நிலைய ஆடை அணிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படும் அந்த ஆசிரியர் தொடர்பான இந்த வழக்கு, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படும்.
நேற்று, பள்ளி தொழுகைக்கூடத்திற்கு முன்பாக ஒரு பெண் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்தார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மதியம் 1.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பெண் கார் ஓட்டுநரும், இரு மாணவிகளும் சம்பந்தப்பட்டதாக கோத்தா பாரு மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் அஸ்மிர் டமிரி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண் ஓட்டுநர், தனது வாகனத்தின் எண்ணெய் மிதியை (accelerator) தவறுதலாக அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து, தஞ்சோங் மாஸ் தேசிய இடைநிலைப் பள்ளியின் (SMK) இரு மாணவிகள் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இச்சம்பவத்தின் விளைவாக, ஒரு மாணவி தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு மாணவிகள் மீது கார் மோதிய சம்பவம் - ஆசிரியர் தடுப்புக் காவலுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார்
13 ஏப்ரல் 2026, 3:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தரப்பு விசாரணை நிறைவு
Bernama
26 ஆகஸ்ட் 2026

national
உலு சிலாங்கூர் பள்ளி ஆசிரியை மரணம்: விசாராணைக்கு சிலாங்கூர் மாநிலக் கல்வித்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும்
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2026

national
இந்தோனேசிய ஆடவர் கொலை: இருவர் மீது குற்றச்சாட்டு
Bernama
28 ஆகஸ்ட் 2026

national
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் எம். சரவணன் மீது RM1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு
Bernama
28 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



