கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி: சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்கு ரிம350 வரை ரொக்கப் பரிசு

10 ஏப்ரல் 2026, 2:15 AM
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி: சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்கு ரிம350 வரை ரொக்கப் பரிசு

ஷா ஆலம், ஏப்ரல் 10: 2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி மாணவர்கள், 'சிறந்த தேர்வு முடிவுக்கான பரிசு' திட்டத்தின் கீழ் ரிம350 வரை ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர்கள்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் குறைந்தது 5A பெற்றிருக்க வேண்டும்.
அவர்களின் பெற்றோர் (தாய் அல்லது தந்தை) இத்தொகுதியில் பதிவு செய்த வாக்காளராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என அதன் சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் கூறினார்.

"இந்தச் சிறப்பான சாதனை, சவால்களை எதிர்கொள்வதில் உங்கள் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியைப் பிரதிபலிக்கிறது."

சிறந்த
தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விதமாக இந்த பரிசு வழங்கப்படுவதாகப் பாங் சோக் தாவ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

விண்ணப்பங்களை விளம்பரச் சுவரொட்டியில் உள்ள கியூஆர் குறியீடு
(QR code) மூலம் அல்லது வழங்கப்பட்ட இணைப்பு வழியாக அனுப்பலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் 30, 2026 ஆகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.