மூன்று நாட்களுக்கு முன்பு கம்போங் குவாந்தான் ஆற்றில் தவறி விழுந்த முதியவர், இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

5 ஏப்ரல் 2026, 11:05 AM
மூன்று நாட்களுக்கு முன்பு கம்போங் குவாந்தான் ஆற்றில் தவறி விழுந்த முதியவர், இன்று காலை  சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கோல சிலாங்கூர், ஏப்ரல் 5: மூன்று நாட்களுக்கு முன்பு கம்போங் குவாந்தான் ஆற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்பட்ட சக்கர நாற்காலியில் இருந்த முதியவர், இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப் பட்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், 63 வயதான அந்த உள்ளூர் ஆடவரின் சடலம், பத்து தூஜோ செத்தெங்கா ஜெட்டிக்கு அருகே காலை 8.30 மணியளவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்
பட்டது.

“பாதிக்கப்பட்டவர் தவறி விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 5.5 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்
பட்டார். இந்த சம்பவம் குறித்த அறிக்கை மூன்று நாட்களுக்கு முன்பு இரவு 9.09 மணிக்கு கிடைத்தது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

இந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், ஷா ஆலம் மற்றும் கிள்ளான் துறைமுக தீயணைப்பு நிலையங்களின் நீர் மீட்புக் குழு (PPDA) மற்றும் தடய நாய் பிரிவின் உதவியுடன் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

https://mediaselangor.com/ms/2026/04/350677

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.