ஷா ஆலம், ஏப்ரல் 3 - பண்டான் பெர்டானா வர்த்தகப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட நடவடிக்கையில், பொது வாகன நிறுத்துமிடங்களில் இடையூறாக இருந்த 20 பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) பறிமுதல் செய்தது.
இந்த நடவடிக்கையின்போது, பொதுமக்கள் வாகன நிறுத்தும் வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பொருட்களை வைத்திருந்த தனிநபர்கள் அல்லது தரப்பினருக்கு எதிராக 67 சம்மன்களும் வழங்கப்பட்டன.
"பொதுப் பயன்பாட்டைப் பாதிக்கும் வகையில், வாகன நிறுத்துமிடங்களைத் தடுப்பதற்காகப் பொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்ட தரப்பினர் மீது பறிமுதல் மற்றும் சம்மன் நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று எம்பிஏஜே முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது வசதிகள் நியாயமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணவும் இந்த அமலாக்க நடவடிக்கை அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நகராண்மை கழகம் உறுதியளித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏதேனும் புகார்கள் அல்லது தகவல்கள் இருந்தால், அவற்றை எம்பிஏஜே பொது புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலமாகவோ அல்லது 1-800-22-8100 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ தெரிவிக்கலாம்.
பொது வாகன நிறுத்துமிடங்களில் இடையூறாக இருந்த 20 பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பறிமுதல் செய்தது
3 ஏப்ரல் 2026, 7:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
காதலியைத் தொந்தரவு செய்ததாகக் கூறி சக மாணவரைத் தாக்கிய 3 மாணவர்கள் ; போலீஸ் கைது
Latchumy Ramamoorthy
25 ஜூலை 2026

selangor
டுரியான் வியாபாரம்: 55 தற்காலிக விற்பனை கூடங்கள் ஏற்பாடு - எம்பிஏஜே
Shalini Rajamogun
24 ஜூன் 2026

selangor
நான்கு மாதங்களில் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரி வசூல் - எம்பிஏஜே தகவல்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
26 மே 2026

selangor
அம்பாங் ஜெயாவில் 7,000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் 'பிளாட்ஸ்' திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
12 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



