ஷா ஆலம், ஜன 12: புக்கிட் காசிங் தொகுதியில் வசிக்கும், மூத்த குடிமக்கள் ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள தேதிகளை பிறந்த நாட்களாக கொண்டிருந்தால் , ஜனவரி 20 முதல் RM 150 மதிப்புள்ள பிறந்தநாள் வவுச்சர்களை பெற்றுக்கொள்ளலாம்.
தங்கள் பிறந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதாக கொண்டாட உதவும் வகையில் மூத்த குடிமக்களுக்கு ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) திட்டத்தின் கீழ் இந்தப் வவுச்சர்கள் வழங்கப் படுவதாகப் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.
"வவுச்சர்கள் கட்டங்கட்டமாக வழங்கப்படுகின்றன. மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் புதன்கிழமை இரவு 7.30 மணி வரை புக்கிட் காசிங் தொகுதி அலுவலகத்தில் வவுச்சர்களைப் பெறலாம், " என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
இத்திட்டத்திம் மாற்றுத்திறனாளிகளுக்கும் (OKU) முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.
"படிக்கட்டுகளில் ஏற முடியாத SMUE மற்றும் SMIS பெறுநர்களுக்கு வவுச்சர்களைப் பெற தரை தளத்தில் உள்ள ஊழியர்கள் உதவுவார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
அனைத்து பெறுநர்களும் வவுச்சர்களைப் பெற்ற 90 நாட்களுக்குள் அவற்றைப் பயன்படுத்துமாறும் ராஜீவ் நினைவூட்டினார்.
இந்த ஆண்டு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு இரண்டு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு, SMUE மற்றும் SMIS செயல் படுத்தலுக்காக சிலாங்கூர் RM20 மில்லியனை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.


