ஷா ஆலாம், ஏப்ரல் 1: PJS2 பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு, மாநில சமய விவகாரங்கள் மற்றும் புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி ஙா உடனடி உதவி வழங்கியுள்ளார்.
மார்ச் 28ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் தீ விபத்தில் இரண்டு அடுக்குமாடி வீடுகள் சேதமடைந்த-தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தற்காலிகமாக PJS4-இல் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
"PJS2 தாமான் மேடானில் பாதிக்கப்பட்ட 19 பேரையும் நான் நேரில் சென்று சந்தித்தேன்," என்று டாக்டர் ஃபஹ்மி தனது ஃபேஸ்புக் காணொளியில் தெரிவித்தார்.
செரி செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான அவர், மீட்புப் பணிகளிலும், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி வழங்குவதிலும் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), சமூக நலத்துறை, MBPJ, பெட்டாலிங் நில அலுவலகம், சிலாங்கூர் ஜகாத் வாரியம் மற்றும் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, தாமான் மேடான், ஜாலான் PJS2 2D/12-இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு சுமார் 80 விழுக்காடும், மற்றொன்று 50 விழுக்காடும் சேதமடைந்தது.
மாலை 5.34 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜாலான் பெஞ்சாலா தீயணைப்பு நிலைய வீரர்கள், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா நிலையங்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
PJS 2 தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு, ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி ஙா உடனடி உதவி
1 ஏப்ரல் 2026, 4:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பந்திங், செமினி உட்பட ஆறு இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
26 ஜூன் 2026

selangor
தாமான் மேடான் தொகுதியில் 200 மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டு, பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன
Shalini Rajamogun
20 டிசம்பர் 2025

---
Program Ziarah Prihatin ADUN Taman Medan Ditingkatkan
admin
3 மார்ச் 2012

selangor
வறுமையை ஒழிப்பதில் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி சாதனை
Shalini Rajamogun, Dewi Abdul Rahman
15 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



