காஜாங் போக்குவரத்து போலீசார் சட்டவிரோத பந்தய நடவடிக்கையாளர்களுக்கு நேற்று 46 சம்மன்கள் வழங்கினர்.

23 மார்ச் 2026, 11:05 AM
காஜாங் போக்குவரத்து போலீசார் சட்டவிரோத பந்தய நடவடிக்கையாளர்களுக்கு நேற்று 46 சம்மன்கள் வழங்கினர்.

ஷா ஆலாம், மார்ச் 23 – செமினி, ஜாலான் செத்தியா மயூரியில் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 46 சம்மன்கள் வழங்கப்பட்டன.

காஜாங் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (BSPTD), 'ஓப்ஸ் சம்செங் ஜாலான்' மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கை-யின் கீழ், சம்பந்தப்பட்ட இடத்தில் 24 நபர்கள் மற்றும் 18 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப் பட்டதாக தெரிவித்தது.

"ஓட்டுநர் உரிமம் இல்லாதது, புகைப் போக்கிகளை மாற்றியமைத்தது, காலாவதியான சாலை வரி மற்றும் பிற தொழில் நுட்ப வாகன விதிமீறல்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 46 சம்மன்கள் வழங்கப் பட்டன," என்று பேஸ்புக் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து சட்டங்களை மீறும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தப் பிரிவு எச்சரித்துள்ளது."பொது   அமைதியையும் , சாலைப் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, சட்டவிரோத பந்தய நடவடிக்கை மற்றும் சாலைப் போக்குவரத்து சட்டமீறல்களில் ஈடுபடுவோர் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த நிறுவனம் உறுதியாகக் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.