சிலாங்கூர் சுல்தான், 15,000 தொழுகையாளர்களுடன் ஐடில்ஃபித்ரி சுன்னத் தொழுகை நிறைவேற்றினார்

21 மார்ச் 2026, 7:22 AM
சிலாங்கூர் சுல்தான், 15,000 தொழுகையாளர்களுடன் ஐடில்ஃபித்ரி சுன்னத் தொழுகை நிறைவேற்றினார்

ஷா ஆலம், 21 மார்ச்: சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ், இன்று காலையில் இங்குள்ள  சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜீஸ் ஷா மசூதியில் சுமார் 15,000 தொழுகையாளர்களுடன் ஐடில்ஃபித்ரி சுன்னத் தொழுகையை நிறைவேற்றினார். பச்சை நிற பாஜு மெலாயு உடையில் முழு அலங்காரத்துடன் அரசர் வருகை தந்தார்.

அவருடன் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹஜா நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோர் உடனிருந்தனர். அரசரின் வருகையை மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில  ஆட்சிக்குழு மற்றும் நிர்வாக தலைமைப் பிரமுகர்கள் வரவேற்றனர்.

தொழுகைக்கு முன்னர் அரசர் ஜெமாத்துடன் தக்பீர் ராயா உச்சரித்தார். அதன் பின்னர் ஐடில்ஃபித்ரி சுன்னத் தொழுகையை நிறைவேற்றினார். பின்னர் சிலாங்கூர் முஃப்தி டத்தோ டாக்டர் அன்ஹார் ஒபீர் “ஷவ்வால் – புதிய தொடக்கம்” என்ற தலைப்பில் ஐடில்ஃபித்ரி குத்பாவை நிகழ்த்தினார்.

குத்பாவில், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் வாய்ப்பை பெற்றதற்காக அல்லாஹ்வுக்கு நன்றியுடன், தக்பீர், தஹ்மீத் மற்றும் ஷுக்காட் ஆகியவற்றுடன் அவரை மகிமைப்படுத்துமாறு இஸ்லாமிய சமூகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் நபி முஹம்மது மற்றும் அவரது தோழர்களின் பொறுமை மற்றும் தவக்குல் பண்புகளைப் பின்பற்றுமாறும், அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பாதுகாக்கும் போது எழும் சவால்களுக்கு அஞ்சாமல் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

ஷவ்வால் மாதம் ஒரு புதிய தொடக்கமாகக் கருதப் படுவதாகவும், இயற்கையான பண்புகளுக்கு (ஃபித்ரா) திரும்பி, அல்லாஹ்வின் கீழ்ப்படிதலை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் குத்பாவில் தெரிவிக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.