நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் தற்காப்பு வாத தரப்பின் விசாரணைத் தொடங்குகிறது

3 ஜூலை 2026, 9:40 AM
நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் தற்காப்பு வாத தரப்பின் விசாரணைத் தொடங்குகிறது

ஜோர்ஜ்டவுன், ஜூலை 3 - 9 ஆண்டுகளுக்கு முன்பு, பகடிவதைக்கு ஆளாகிய தி.நவீனை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தற்காப்பு வாதம் புரிவதற்கான வழக்கு விசாரணை தேதி முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும், அதைத் தொடந்து அக்டோபர் 12-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 8 நாட்களுக்கு அந்த வழக்கு விசாரணை நடைபெறுமென ஜோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

26 வயது ஜே.ராகசுதன், 26 வயது எஸ்.கோகுலன் உட்பட சம்பவம் நிகழ்ந்த போது பதின்ம வயதினராக இருந்த மேலும் இருவரும் தற்காப்பு வாதம் புரியும் படி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அந்நால்வரையும் வழக்கறிஞர் மன்விர் சிங் டிலோன், ஆர்.தேவன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.