மலேசிய சூப்பர் லீக் போட்டி; சிலாங்கூர் எஃப் சி அணி இமிகிரேசன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது 

9 மார்ச் 2026, 3:45 AM
மலேசிய சூப்பர் லீக் போட்டி; சிலாங்கூர் எஃப் சி அணி இமிகிரேசன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது 

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 9 - நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அரங்கில் (MBPJ) நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில், இமிகிரேசன் எஃப்சி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சிலாங்கூர் எஃப்சி, மீண்டும் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

'ரெட் ஜெயண்ட்ஸ்' அணியின் கோல் மழை, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் தொடங்கியது. சக வீரர் பைசல் ஹலிம் கொடுத்த பந்தை கிறிகோர் மோரேஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

முதல் பாதியின் இறுதியில், அஹ்மத் சிக்ரி முகமது கலிலி சிலாங்கூரின் இரண்டாவது கோலை அடித்து, சொந்த அணிக்கு 2-0 என முன்னிலை அளித்தார்.இரண்டாம் பாதியில், சிலாங்கூர் அணி தனது தாக்குதல்களைத் தளர்த்தவில்லை.

இமிகிரேசன் எஃப்சி அணியின் கோல் எல்லையை நோக்கி தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தியது.அந்த முயற்சிக்கு ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

ஆல்வின் ஃபோர்டெஸ் வழங்கிய பந்தை கோலாக மாற்றியதன் மூலம் மோரேஸ் மீண்டும் தனது பெயரைப் பதிவு செய்தார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், விக்டர் பெர்னாம்புகோ 'சிவப்பு மஞ்சள்' அணிக்காகத் தனது முதல் கோலை அடித்து, சிலாங்கூரின் வெற்றி இரவை முழுமையாக்கினார்.

இதன் மூலம் சிலாங்கூர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.இந்த வெற்றியின் மூலம், சிலாங்கூர் அணி 39 புள்ளிகளைச் சேகரித்துள்ளது.

கோலாலம்பூர் சிட்டி எஃப்சி (கேஎல் சிட்டி) அணியுடன் சமமான புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டாலும், சிறந்த கோல் வித்தியாசத்தின் அடிப்படையில், கே.எல்.  சிட்டி அணியைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.