ஸ்பெயின் நாட்டுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதாக டிரம்ப் எச்சரிக்கை

5 மார்ச் 2026, 10:05 AM
ஸ்பெயின் நாட்டுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதாக டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், மார்ச் 5 - ஈரானைத் தாக்குவதற்கு அமெரிக்க விமானங்கள் தனது தளத்தைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்திருந்தது. அதனால், அந்நாட்டுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதாக டோனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், வாஷிங்டனுடன் முழுமையாக ஒத்துழைக்காததால், பிரிட்டன் மீதான தமது அதிருப்தையையும் டிரம்ப் வெளிப்படுத்தினார்.

இதனை செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானைத் தாக்குவதற்கு இராணுவ தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கப்பட்டாது குறித்து, ஸ்பெயின் அதன் நிலைப்பாட்டை முன்னதாக வெளிப்படுத்தி இருந்தது. இச்சூழ்நிலையில் குறைந்தது ஏழு அமெரிக்க விமானங்கள் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டெய்ன் விமானத் தளத்தில் தரையிறங்கின.

உலகப் போர்களிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களிலும் அமெரிக்காவின் தீவிர பங்காளியாக இருந்த பிரிட்டனும், ஈரான் மீதான தாக்குதலில் இணைய மறுத்துவிட்டது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.