மார்ச் 11 வரை RON95இன் மானிய விலையில் மாற்றம் இல்லை

5 மார்ச் 2026, 1:27 AM
மார்ச் 11 வரை RON95இன் மானிய விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 5 – இன்று முதல் மார்ச் 11 வரை RON97 லிட்டருக்கு RM3.25, RON95 RM2.67 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை RM3.12 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உலக எண்ணெய் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், RON95-இன் மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு RM1.99 மானிய விலையில் அரசு பராமரித்து வருவதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.