எம்பிஏஜே மறுசுழற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது – பொதுமக்களுக்கு அழைப்பு

3 மார்ச் 2026, 9:03 AM
எம்பிஏஜே மறுசுழற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது – பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 3: மார்ச் 7 அன்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்துள்ள மறுசுழற்சி திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்க பொதுமக்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

AU3/1 கெராமட் சமூக மண்டபத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் அறிவித்துள்ளது.

"இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஒரு கிலோவிற்கு RM3 விலையில், மின்/மின்னணு கழிவுகள் கிலோவிற்கு RM0.20 விலையில் விற்கலாம்," என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அலுமினிய கேன்கள் ஒரு கிலோவிற்கு RM1, இரும்பு ஒரு கிலோவிற்கு RM0.40, மற்றும் பெட்டிகள், காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள் கிலோவிற்கு RM0.20 விலையில் விற்கலாம்.

"இந்த திட்டம் மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்காலத்தில் சமூகத்தினரிடையே மறுசுழற்சி நடைமுறைகளை தொடரவும் ஊக்குவிப்பதற்கான முயற்சியாகும்," என்று எம்பிஏஜே தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவலுக்கு, எம்பிஏஜே நகர்ப்புற மற்றும் சுகாதார சேவைகள் துறையை 03-42857390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.