கிள்ளானில் துர்நாற்றத்தை ஏற்படுத்திய வணிக நிறுவனத்திற்கு அபராதம்

3 மார்ச் 2026, 7:25 AM
கிள்ளானில் துர்நாற்றத்தை ஏற்படுத்திய வணிக நிறுவனத்திற்கு  அபராதம்

ஷா ஆலம், மார்ச் 3 : பண்டார் சுல்தான் சுலைமான், லோரோங் சுல்தான் முகமட் 1B பகுதியில் வீசிய துர்நாற்றம் குறித்த புகாரைத் தொடர்ந்து, கிள்ளான் அரச மாநகராட்சி உரிமப் பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவினருடன் இணைந்து உடனடி விசாரணையைத் தொடங்கியது.  

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் முறையான வணிக உரிமத்தைக் கொண்டிருந்தாலும், தூய்மை நிலையைப் பேணத் தவறியதோடு உரிம நிபந்தனைகளையும் மீறியுள்ளது. இது அப்பகுதி குடியிருப்பாளர்களின் நிம்மதியைப் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

 இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய உரிமையாளருக்கு எதிராக உரிமத்தை ரத்து செய்வதற்கான அறிவிப்பு மற்றும் அபராதம் உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகளை MBDK மேற்கொண்டுள்ளது.

"தூய்மை அம்சங்களைப் புறக்கணித்து, உள்ளூர் சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் வணிக உரிமையாளர்களுடன் கிள்ளான் அரச மாநகராட்சி ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று அந்த அறிக்கையில் கடுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் நலன் மற்றும் ஒற்றுமையைப் பேண, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து பின்பற்றுமாறு  கிள்ளான் அரச மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.