கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவையில் 26 புதிய இரயில்கள் இணைக்கப்படவுள்ளன

1 மார்ச் 2026, 1:58 AM
கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவையில் 26 புதிய இரயில்கள் இணைக்கப்படவுள்ளன

கோலாலம்பூர், மார்ச் 1 - கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவையில் 2028-ஆம் ஆண்டுக்குள் 26 புதிய இரயில்கள் இணைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அடிக்கடி பழுதடையும் பழைய இரயில்களை மாற்றுவதற்காக இப்புதிய இரயில்கள் கொண்டு வரப்படுகின்றன.

“பராமரிப்பு பணிகளில் எந்த சமரசமும் இருக்க முடியாது. 818 ரயில் தொகுதிகளுக்கான திட்டத்திலும் அவசரநிலை மாற்றுத் திட்டத்திலும் பிரசாரனா மேம்பாடுகளை மேற்கொள்ளும்,” என்று லோக் மேலும் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகவும் பரபரப்பான எல்.ஆர்.டி. ரயில் வழித்தடங்களில் ஒன்றான கிளானா ஜெயா பாதையின் சேவையை மேம்படுத்த இது உதவும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இப்புதிய இரயில்கள் பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நெரிசல் நேரங்களில் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க முடியும்.

இத்திட்டத்திற்கு 2026 பட்ஜெட்டில் RM1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.