தாமஸ் கோப்பை போட்டியில் நாட்டின் சவாலை வலுப்படுத்தும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி நம்பிக்கை தெரிவித்தார்

26 பிப்ரவரி 2026, 8:28 AM
தாமஸ் கோப்பை போட்டியில் நாட்டின் சவாலை வலுப்படுத்தும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி நம்பிக்கை தெரிவித்தார்
தாமஸ் கோப்பை போட்டியில் நாட்டின் சவாலை வலுப்படுத்தும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி நம்பிக்கை தெரிவித்தார்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி – தொழில்முறை வீரர்கள் மற்றும் மலேசிய பூப்பந்து சங்கத்தின் (பேம்) கீழ் உள்ள வீரர்களின் இணைப்பு, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் நடைபெறவுள்ள தாமஸ் கோப்பை போட்டியில் நாட்டின் சவாலை வலுப்படுத்தும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி ஒற்றையர் வீரரான லீ ஸி ஜியா, தேசிய அணியில் இணைய முன்வந்துள்ளது, 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்கோப்பையை வெல்லும் முயற்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

"1992-ல் கடைசியாக வென்ற தாமஸ் கோப்பையின் பெருமையை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வர நம்முடன் இணைய ஒப்புக்கொண்ட லீ ஸி ஜியா மற்றும் அவரது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."

"நாட்டுப்பற்றின் அடிப்படையிலும், நாட்டிற்குச் சிறந்ததை வழங்கும் நோக்கிலுமே இந்த பங்களிப்பு செய்யப்படுகிறது. அதற்கு என் நன்றி," என்று இன்று புக்கிட் ஜாலில், தேசிய விளையாட்டு மன்றத்தின் (எம்.எஸ்.என்) அரங்கில் 'மை அத்லீட் சென்டர்' தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

2026 தாமஸ் கோப்பை போட்டியில் மலேசியாவிற்கு உதவத் தயாராக இருப்பதாக லீ ஸி ஜியா சமீபத்தில் உறுதிப்படுத்தினார். மேலும், பேம் அமைப்பிடம் அவர் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.