பெட்டாலிங் ஜெயா, பிப் 23- மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் பரதன் கிண்ண கால்பந்து போட்டி மார்ச் மாதம் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
Fam எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரே இந்திய கால்பந்து போட்டி பரதன் கிண்ணமாகும்.
வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் மே மாதம் 9 ஆம் தேதி வரை பரதன் கிண்ண கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தெரிவித்தார்.
எப்ஏஎம் விதிமுறைகளுக்கு உட்பட்டு பரதன் கிண்ண கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. பினாங்கு, கெடா, பெர்லிஸ், பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய குழுக்கள் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது.
அழைப்பிதழ் குழுவாகப் போலீஸ் படை பங்கேற்கும் என்று அவர் சொன்னார்.
இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் குழுக்கள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்றார்.
இதனிடையே பரதன் கிண்ண கால்பந்து போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவராக டத்தோ பதி பொறுப்பு ஏற்றுள்ளார்.
இம்முறை பரதன் கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 20,000 வெள்ளி ரொக்கப் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 10,000 வெள்ளியும் 3,4ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா 3 ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் என்று டத்தோ பதி சொன்னார்.
இளம் இந்திய கால்பந்து விளையாட்டாளர் களை உருவாக்கும் வகையில் பரதன் கிண்ண கால்பந்து போட்டியை மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்று டத்தோ பதி சொன்னார்.
எப்ஏஎம் கட்டட மண்டபத்தில் பரதன் கிண்ண கால்பந்து போட்டி குலுக்கல் நடைபெற்றது.
டத்தோ சுப்ரா ரத்னவேலு தலைமையில் நடைபெற்ற இந்த குலுக்களில் மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பரதன் கிண்ண கால்பந்து போட்டி மார்ச் 28 இல் ஆரம்பம்!
23 பிப்ரவரி 2026, 10:01 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
சுக்மா 2026: கோலாலம்பூரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சிலாங்கூர் காற்பந்து அணி
Najamuddin Mohd Nor
15 ஆகஸ்ட் 2026

sukankini
சுக்மா 2026 : சிலாங்கூர் கோல் மழை ; கூட்டரசை 7-0 என வீழ்த்தியது
Shamz Johan
12 ஆகஸ்ட் 2026

national
காற்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி தாய்லாந்து வீரர் மரணம்; மலேசியர் உட்பட 12 பேர் காயம்
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

sukankini
சுக்மா 2026 ; காற்பந்து, கிரிக்கெட் போட்டிகள் முன்கூட்டியே நடைபெறும்
Norrasyidah Arshad
2 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?

