காலை கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் சேவையில் பாதிப்பு

23 பிப்ரவரி 2026, 4:04 AM
காலை கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் சேவையில் பாதிப்பு

கோலாலம்பூர், பிப். 23 — இன்று காலை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகக் கிளானா ஜெயா எல்.ஆர்.டி வழித்தட சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த இடையூறு காரணமாகப் பயணிகள் இரயில்களுக்காக வழக்கத்திற்கு விட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரெபிட் கேஎல் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

“சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி,” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் தங்கள் இடங்களை பாதுகாப்பாக அடைவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நீண்ட சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் விடுமுறைக்குப் பிறகு முதல் வேலை நாளில் இந்த சம்பவம் நடந்ததால், சமூக ஊடகங்களில் பல பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.