வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆடவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

20 பிப்ரவரி 2026, 9:16 AM
வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆடவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

கோலாலம்பூர், பிப் 20 - ஜாலான் செந்தூலில் ஒரு வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆடவரை, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 6.35 மணியிலிருந்து 6.36 மணிக்குள் அடையாளம் தெரியாத பெண்ணை ஜாலான் செந்தூலில் உள்ள கடை ஒன்றின் முன்பு கொலை செய்ததாக 46 வயதான சாயிட் பைசால் சாயிட் அல்வி மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, சாயிட் பைசால் தலையை மட்டுமே அசைத்தார்.

எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இதை அடுத்து மார்ச் 19 -ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.