கோத்தா கெமுனிங் தொகுதியில் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்கலாம்

19 பிப்ரவரி 2026, 3:28 AM
கோத்தா கெமுனிங் தொகுதியில் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், பிப் 19: எதிர்வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு, பிப்ரவரி 23 முதல் ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க கோத்தா கெமுனிங் சமூக சேவை மையம் அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வவுச்சர்கள் SMUE அல்லது SMIS திட்ட உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும், ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாடுபவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்ட கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களாக இருக்க வேண்டும்.

“ஒரு குடும்பத்திற்கு ஒரு வவுச்சர் என்ற அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படும்.

இந்த திட்டம், பண்டிகைக் காலங்களில் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு 03-5131 4354 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.