பட்டாசு வெடித்ததில் ஆடவரின் கால் துண்டானது

19 பிப்ரவரி 2026, 12:39 AM
பட்டாசு வெடித்ததில் ஆடவரின் கால் துண்டானது

செகாமட், பிப். 19 – புக்கிட் சிப்புட், தாமான் டாமாய் ஜெயாவில் பட்டாசு வெடித்ததில் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவரின் இடது கால் துண்டானது.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பாதிக்கப்பட்டவர் ‘shoot cake 4 (D) 16 shot’ (premium) வகைப் பட்டாசை வெடித்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

நள்ளிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக செகாமட் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டதாக செகாமட் மாவட்டக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஜுமாசான்சாஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் இடது காலின்
முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும், தற்போது அவரின் நிலை சீராக இருப்பதாகவும் ஜுமாசான்சாஹிர் கூறினார்.

"1957-ஆம் ஆண்டு வெடிமருந்துச் சட்டத்தின் 6 மற்றும் 8-ஆவது பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கு போது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.