ஈப்போ: பேராக்கில் இன்று காலை ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று மாலை மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேராகக் குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் நேற்று முதல் மஞ்சோய், கம்போங் தெங்கு ஹுசைன் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் மஞ்சோய் மற்றும் கம்போங் தெங்கு ஹுசைன் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் என அந்த அறிக்கை மேலும் கூறியது.
இதற்கிடையில், ஹிலீர் பேராக், உலு பேராக், கோல கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங், முவாலிம் மற்றும் பேராக் தெங்கா ஆகிய எட்டு மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-- பெர்னாமா
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரை குறைந்தது வருகிறது.
18 பிப்ரவரி 2026, 11:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
---
Mangsa banjir dapat RM250
Unknown Author
17 நவம்பர் 2015
---
Selangor bantu bina rumah, persekolahan mangsa banjir
admin
2 ஜனவரி 2015
national
கெரிக்கில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Media Selangor Team
28 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூரில் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது; பேராக்கில் உயர்வு
Latchumy Ramamoorthy
28 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



