MyGOV செயலியை 1,567,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

13 பிப்ரவரி 2026, 2:24 AM
MyGOV செயலியை 1,567,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

கோலாலம்பூர், பிப் 13 – கடந்த ஆண்டு டிசம்பரில் 437,000 பயனர்கள் மட்டுமே MyGOV செயலியை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை 200 விழுக்காடு உயர்ந்து 1,567,000 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அச்செயலி 16 அரசாங்க நிறுவனங்களிலிருந்து 44 சேவைகளை கொண்டு விரிவுபடுத்தப்பட்டிருப்பது மலேசியர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

MyGOV செயலி வழியாக அமல்படுத்தப்படும் ரஹ்மா உதவித் தொகை (STR) மற்றும் கோரப்படாதப் பணத்தின் சரிபார்ப்பு முறைகள் மூலம் இந்த அதிகரிப்பு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“விண்ணப்பம் மற்றும் கட்டணம் உட்பட பொதுவான சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, கட்டம் கட்டமாக இச்சேவைகளின் ஒருங்கிணைப்பு செயல்முறை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 2026ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்பு செயல்முறைக்காக 30க்கும் மேற்பட்ட புதிய சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

மக்களவையில், அரசாங்க நிறுவனங்கள் தனித்தனியாக பயன்படுத்தும் பல்வேறு செயலிகளை மாற்றி, அனைத்து நிர்வாக சேவைகளையும் ஒன்றிணைக்கும் ஒரே செயலியை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஹொங் பின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

— பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.