சோமாலியா, பிப் 12 - சோமாலியாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கால்காயோ நகரத்திற்குப் புறப்பட்ட ``Starsky Aviation`` விமானத்தில் 15 நிமிடங்களுக்குள் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
பின்னர், உடனே விமானம் கடற்கரையில் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த 50 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது.
Fokker 50 வகையைச் சார்ந்த அந்த விமானம், கடற்கரையில் இறங்கும்போது அதன் இறக்கை உடைந்திருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் சேதமின்றி இருந்தன.
இந்நிலையில், மீட்பு குழுவினரால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சோமாலியா போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


