ஷா ஆலாம், பிப் 11- பூச்சோங் - டமான்சாரா நெடுஞ்சாலையின் டோல் சாவடியில் கார் மீது கோன் வீசியதாக நம்பப்படும் உள்ளூர் ஆடவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது
நன்னடத்தைக்குச் சிக்கல் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயதுடைய கே. கணபதி தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
டோல் சாவடியில் பொது அமைதிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கே.கணபதி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் இக்குற்றத்தை மாலை 5.25 மணிக்குப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சம்பந்த்ப்பட்ட ஆடவரும் 100 ரிங்கிட் அபராதம் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது


