கோலாலம்பூர் அக்.10: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 விழுக்காடு டோல் கழிவு அளிக்கபடுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2026ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த 50 விழுக்காடு டோல் கட்டண கழிவு இரு நாட்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
50 விழுக்காடு டோல் கட்டண கழிவை அளிக்க தனது தலைமையிலான அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கரவொலிக்கு மத்தியில் பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக மலேசிய இந்தியர்களால் கொண்டாடப்படவுள்ளது.