கோலாலம்பூர், பிப் 11 - பிப்ரவரி 7 வரை மலேசியாவில் 10 புதிய காசநோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இதில் சிலாங்கூர் அதிக எண்ணிக்கையுடன் முன்னிலையில் இருக்கிறது. அதாவது அங்கு நான்கு சம்பங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜோகூரில் ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதாக அமைச்சர் விளக்கினார். மேலும், 903 நெருங்கிய தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக காசநோய் நிலை மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் செயலில் உள்ள வழக்குகள் குறித்து, மக்களவையில் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
காசநோய் பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு ஆரம்பகால காசநோய் எதிர்ப்பு சிகிச்சை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.


