சிலாங்கூர் பிளாட்ஸ் (PLATS) கீழ் பதிவு செய்துள்ள சுமார் 200 வியாபாரிகள், தங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவி பெற்றனர்.

10 பிப்ரவரி 2026, 6:08 AM
சிலாங்கூர் பிளாட்ஸ் (PLATS) கீழ் பதிவு செய்துள்ள சுமார் 200 வியாபாரிகள், தங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவி பெற்றனர்.

பாங்கி, பிப் 10: சிலாங்கூர் பிளாட்ஸ் (PLATS) கீழ் பதிவு செய்துள்ள சுமார் 200 வியாபாரிகள், தங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் வகையில், RM2,000-க்கும் அதிகமான மதிப்புள்ள விற்பனை தளவாடங்களை (POS)  இலவசமாகப் பெற்றனர்.

சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் (MBI) தலைவர், அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறுகையில், இந்த BizApp POS சாதனம், நேரடி கையேட்டு விற்பனை முறைக்கு மாற்றாக, மிகவும் எளிதான மற்றும் திறமையான டிஜிட்டல் முறைக்கு வழிவகுக்கிறது என்றார். உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் U-PLATS DIGITAL பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பிளாட்ஸ் வியாபாரிகளை உள்ளடக்கிய இந்த முயற்சியின் மொத்தச் செலவு சுமார் RM500,000 ஆகும் என்று அவர் கூறினார்.

"இந்த அமைப்பில் உள்ள 'டாஷ்போர்டு', வியாபாரிகள் தங்களின் தினசரி விற்பனையைக் கண்காணிக்கவும், அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளை அடையாளம் காணவும் உதவுகிறது, இது அவர்களின் வணிகத்தை விரிவு படுத்துவதற்கு வழிவகுக்கும்," என்று இன்று பாங்கி ரிசேர்ட் ஹோட்டலில் நடைபெற்ற POS இயந்திரங்களை வழங்கும் நிகழ்விற்குப் பிறகு அவர் கூறினார்.

இந்த POS இயந்திரங்களின் பயன்பாடு, சிறு வியாபாரிகளின் விற்பனை வருமானத்தை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்."உதாரணமாக, பெரானாங்கில் ரொட்டி சானாய் மற்றும் ஆட்டுக்கறி விற்கும் ஒரு வியாபாரியைக் கூறலாம். அவரது வணிகம் சிறியது, ஆனால் இந்த முறையைப் பயன்படுத்திய பிறகு, அவர் தனது விற்பனையை மேலும் சீராகக் கண்காணிக்க முடிந்தது, அதன் விளைவாக அவரது விற்பனை இலட்சக்கணக்கான ரிங்கிட்டை எட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது," என்றார்.

அக்டோபர் 2024-இல், ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூரில் உள்ள 50,000 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (PMKS) டிஜிட்டல் தொழில்முனைப்பு மூலம் வலுப்படுத்தும் நோக்கில், MBI, BizApp Ventures Sdn Bhd (BizApp) உடன் ஒரு கூட்டுறவை அறிவித்தது.

இந்தக் கூட்டுறவின் முக்கிய முயற்சிகளில் ஒன்று, பிளாட்ஸ் தொழில்முனைவோருக்கு BizApp POS அமைப்பை இலவசமாக வழங்குவதாகும்.இதற்கிடையில், BizApp-இன் தலைமைச் செயல்முறை அதிகாரி, முகமது ஜெஃப்ரி அமான், ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூரை ரொக்கமில்லா சமூகமாக மாற்றும் மாநில அரசின் இலக்கிற்கு ஆதரவளிக்க, தனது நிறுவனம் MBI-யின் தொழில்நுட்பப் பங்காளியாக உறுதியுடன் இருப்பதாகக் கூறினார்.

தகவலுக்காக, BizApp 2017-இல் நிறுவப் பட்டதிலிருந்து RM5.2 பில்லியன் மொத்தப் பரிவர்த்தனை மதிப்பைக் (GMV) கொண்டு, மலேசியாவின் மிகப்பெரிய கிராமப்புற சமூக வர்த்தகத் தளமாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.