14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்; கிளந்தானில் பரபரப்பு

6 பிப்ரவரி 2026, 6:58 AM
14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்; கிளந்தானில் பரபரப்பு

கோத்தா பாரு, பிப் 6- கிளந்தான், ஜெலி, கம்போங் ரெபானா ஆற்றில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

அவன் தவறி விழுந்ததாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில், இரவு மணி 7.30 அளவில் அச்சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

நடவடிக்கைப் பிரிவுத் தளபதி ஹஸ்மின் நஸ்ருன் அப்துல் ரஹ்மான் கூறுகையில், இரவு 7.04 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து 10 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

"ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்களால் அச்சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.