கிள்ளான், பந்திங் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்- சிலாங்கூர் போலீஸ் தகவல்

4 பிப்ரவரி 2026, 7:45 AM
கிள்ளான், பந்திங் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்- சிலாங்கூர் போலீஸ் தகவல்

பெட்டாலிங் ஜெயா, பிப் 4- கிள்ளான் மற்றும் பந்திங் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கூறினார்.

சேகரிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் சட்ட விவகாரங்கள் இருப்பதால் இந்த வழக்குகள் உடனடியாக முற்று பெற செய்துவிட முடியாது. இதுவரை அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுவெளியில் சில தகவல்களை. மட்டுமே வழங்க முடியும் என்று அவர் சொன்னார்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக, பொதுமக்கள் போலீஸ் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி பந்திங்கில் உள்ள ஓர் உணவகத்திலும் ஜனவரி 7ஆம் தேதி கிள்ளானில் உள்ள தாமான் வங்சா எனும் பகுதியிலும் துப்பாக்கிசூடு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.