ஓடும் காரிலிருந்து விழுந்த ஆடவர் மரணம்- நீலாயில் பரபரப்பு

4 பிப்ரவரி 2026, 7:41 AM
ஓடும் காரிலிருந்து விழுந்த ஆடவர் மரணம்- நீலாயில் பரபரப்பு

நீலாய், பிப் 4- ஓடும் காரிலிருந்து ஆடவர் ஒருவர் விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆடவர் உயிரிழ்ந்தார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யஹ்யா உறுதிப்படுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை ஜாலான் சிரம்பான் - நீலாய் சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய ஆடவர் சுயநினைவின்றி துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி மதியம் 12.35 மணியளவில் அவர் மரணமடைந்ததாக அவர் சொன்னார்.

பயணத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆடவர் ஓடும் காரிலிருந்து கீழே விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

இந்த சம்பவம் திடீர் மரணமாக வகை செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்வதாக ஜொஹாரி ஜாஃபார் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.