புதிய ஆதாரங்கள் இருந்தால் பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்

3 பிப்ரவரி 2026, 7:18 AM
புதிய ஆதாரங்கள் இருந்தால் பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்

புத்ராஜெயா, பிப் 3 - முன்பு “வழக்கு இல்லை” என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், புதிய ஆதாரங்கள் அல்லது தகவல்கள் கிடைத்தால் எந்த வழக்கும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தெரிவித்துள்ளது.

குற்றவியல் வழக்குகளுக்கான விசாரணைகளுக்கு காலவரம்பு இல்லை என்பதால் இது சாத்தியமாகும் என அதன் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

“ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட வழக்கு, ‘வழக்கு இல்லை’ என்று கூறப்பட்டிருக்கலாம். ஆனால், புதிய ஆதாரங்கள், தகவல்கள் அல்லது விசாரணைத் துப்புகள் கிடைத்தால், SPRM மீண்டும் விசாரணை நடத்தும்.

“முன்னதாக விருப்பம் இருந்தாலும் இல்லையெனினும், நாங்கள் பல வழக்குகளில், விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், JWP மேற்பார்வையில் உள்ள பல புகார்கள் தொடர்பான பழைய வழக்குகளை SPRM மீண்டும் திறக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

விசாரணைக்கான அடிப்படை அல்லது உறுதியான தகவல்கள் இல்லாமல், எந்த துறையையும் SPRM முழுமையாகக் கண்காணிக்காது என்றும் அசாம் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலாக, துறைத் தலைவர்கள் தங்கள் துறைகளில் உள்ள அமைப்பு குறைபாடுகளை மதிப்பாய்வு செய்து, மேல் நடவடிக்கைக்காக SPRM-க்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

— பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.