ஷா ஆலம், ஏப்ரல் 21: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) மற்றும் அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட போலியான உள்ளடக்கத்தை டிக்டாக் தளத்தில் பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் தனி நபருக்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) ஒரு விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக அறிவித்துள்ளது.
விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு தகவல் தொடர்புச் சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.எம்.சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (சட்டம் 588), பிரிவு 233-இன் கீழ் நடத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப் பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
"தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொது மக்களைத் தவறாக வழிநடத்தும் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் எந்தவொரு தவறான பயன்பாட்டையும் எம்.சி.எம்.சி கடுமையாகக் கருதுகிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறுவதாகக் கண்டறியப்படும் தரப்பினர் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது மேலும் கூறியது.
எனவே, பொதுமக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்புடன் இருக்குமாறும், சமூக நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தைப் பதிவேற்ற அல்லது பரப்புவதற்குத் தகவல் தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் நினைவூட்டப் படுகிறார்கள்.
எம்ஏசிசி தொடர்பான போலித் தகவல்களைப் பதிவேற்றிய நபர் விசாரணை: அதிகாரிகள் அதிரடி
21 ஏப்ரல் 2026, 10:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சட்டவிரோதக் குடியேறிகளைப் பாதுகாத்ததாகப் புகார்: 11,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது
Pakiya
22 ஏப்ரல் 2026

national
பிலிப்பைன்ஸுக்கு டீசல் அனுப்பப்பட்டதா? போலிச் செய்தி பரப்பியவர் மீது ஸ்கெம்மம் விசாரணை!
Pakiya
18 ஏப்ரல் 2026

national
வாட்ஸ்அப் கணக்கு மோசடிகளைக் கையாள MCMC தலையீடு
Bernama
25 செப்டெம்பர் 2026

national
இணையத்தில் சிறார் பாலியல் சுரண்டல் : MCMC போலிசுடன் ஒத்துழைப்பு
Bernama
24 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



