ஷா ஆலம், பிப் 1 : எதிர்வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பிப்ரவரி 14 வரை ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க பண்டார் உத்தாமா சமூக சேவை மையம் அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வவுச்சர்கள் SMUE அல்லது SMIS திட்டம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தாரர்கள் கட்டாயம் பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களாக இருக்க வேண்டும்.
“தகுதி உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் போஸ்டரில் உள்ள QR குறியிட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டம், பண்டிக்கை காலங்களில் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயல்முறையை எளிதாக்குவதற்காக, முழுமையாக நிரப்பப்பட்ட படிவத்தையும் தேவையான ஆவணங்களின் நகல்களையும் சேர்த்து பண்டார் உத்தாம சமூக சேவை மையத்தின் சமர்ப்பிக்க வேண்டும்.


