2026 “மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்” - விண்ணப்பங்கள் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் திறக்கப்பட்டுள்ளன

1 பிப்ரவரி 2026, 2:44 AM
2026 “மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்” - விண்ணப்பங்கள் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், பிப் 1 - 2026 மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்திற்கான பதிவைப் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் சமூக சேவை மையம் திறந்துள்ளது.

புதிய பள்ளி அமர்விற்கு மாணவர்களும் பெற்றொர்களும் தயாராக உதவும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான பதிவு ஜனவரி 28 தொடங்கி, பிப்ரவரி 5 வரை நடைபெறும் என முகநூலில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் முன்பே பதிவு செய்து, தங்கள் இடத்தை உறுதிசெய்ய கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தாரர்கள் 5,000க்கும் குறைவான குடும்ப வருமானம் மற்றும் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் வாக்காளராக இருத்தல் வேண்டும்.

இந்த உதவிக்கான விண்ணப்பப்பாரத்தைப் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் சமூக சேவை மையத்தில் பெற்று கொள்ளலாம்.

மேலும், பெற்றோரின் அடையாள அட்டையின் நகல், MyKid அல்லது மாணவர் அடையாள அட்டையின் நகல், மற்றும் சம்பளச் சீட்டு அல்லது வருமானச் சரிபார்ப்புக் கடிதம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.