தைப்பூசத் திருவிழா; ஈப்போவில் உள்ள 10 முக்கிய சாலைகள் மூடப்படும்- ஈப்போ போலீஸ் தலைவர் தகவல்

29 ஜனவரி 2026, 4:06 AM
தைப்பூசத் திருவிழா; ஈப்போவில் உள்ள 10 முக்கிய சாலைகள் மூடப்படும்- ஈப்போ போலீஸ் தலைவர் தகவல்

ஈப்போ, ஜன 29- வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஈப்போ நகரப்பகுதியில் உள்ள 10 முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதைகளுக்கு திருப்பிவிடப்படும் என ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் ACP அபாங் சைனல் அபிடின் அபாங் அஹ்மது தெரிவித்துள்ளார்.

சுங்கை பாரி, புந்தோங் நகரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து குனோங் செரோவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் நோக்கி நடைபெறவுள்ள இரத ஊர்வலம் சீராக நடைபெற, இந்தச் சாலை மூடல் நான்கு நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

ஜனவரி 31 (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், சுங்கை பாரியிலிருந்து புறப்படும் இரதம் நண்பகல் 12 மணிக்குள் ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அதேபோல், இரதம் மீண்டும் ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலிலிருந்து பிப்ரவரி 3 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 4 (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் இன்று தெரிவித்தார்.

  1. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து ஜாலான் சுங்கை பாரி வழியாக ஜாலான் துன் பேராக்

  2. ஜாலான் துன் பேராக்–ஜாலான் லாஹாட்

  3. ஜாலான் லாஹாட்–ஜாலான் பெர்ஹெந்தியான்

  4. ஜாலான் லாஹாட்–ஜாலான் சுல்தான் யூசோப்

  5. ஜாலான் சுல்தான் யூசோப்–ஜாலான் சுல்தான் இஸ்கண்டார்

  6. ஜாலான் சுல்தான் இத்ரிஸ் ஷா–ஜாலான் லக்ஸமணா சந்திப்பு

ஆகியவை அடங்கும்.

மேலும்,

  1. ஜாலான் சுல்தான் இத்ரிஸ் ஷா–ஜாலான் ராஜா மூசா அஜீஸ் சந்திப்பு,

  2. ஜாலான் டத்தோ ஒன் ஜாஃபர்–ஜாலான் ராஜா மூசா அஜீஸ்

  3. ஜாலான் ராஜா மூசா அஜீஸ்–ஜாலான் டத்தோ அஹமத் சைத்,

  4. ஜாலான் ராஜா மூசா அஜீஸ்–சுல்தான் இஸ்கந்தார் வட்டப்பாதை (Roundabout)

ஆகிய சாலைகளும் மூடப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.