3 ஆண்டுகளில் 34,000க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

28 ஜனவரி 2026, 8:44 AM
3 ஆண்டுகளில் 34,000க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஜன 28 - கடந்த 3 ஆண்டுகளில் மலேசியாவில் 34,000க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன உள்துறை அமைச்சு KDN தெரிவித்துள்ளது.

கடந்த 2022 இல் 49,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது என டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். அதே சமயம் 18,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றார்.

கடந்த 2025 டிசம்பர் 31 நிலவரப்படி இன்னும் 3,700 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும் இந்த ஆண்டுக்குள் தீர்க்கப்படும்.

இதற்கிடையில், புதிய விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், ஓராண்டுக்குள் முடிவு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில், அங்கீகரிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கோரிய கமல் ஆஷாரி (பிஎன்-கோலா க்ராவ்) கேள்விக்குச் சைஃபுடின் இவ்வாறு பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.