தேசிய மூப்படைதல் வரைவு திட்டம்- நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்

28 ஜனவரி 2026, 8:26 AM
தேசிய மூப்படைதல் வரைவு திட்டம்- நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர், ஜன 28 - தேசிய மூப்படைதல் வரைவுத் திட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இரண்டாயிரத்து இருபத்து ஐந்து முதல் இரண்டாயிரத்து நாற்பத்து ஐந்து வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை, பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நசீர் அறிவித்தார்.

இரண்டாயிரத்து நாற்பத்து எட்டாம் ஆண்டில், மலேசியா முதியோர் நிறைந்த நாடாக மாறுவதை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கியத் துறைகளில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும்.

மேலும், பதின்மூன்றாவது மலேசியத் திட்டத்தின் கீழ் முதியோர் நலன் சார்ந்த புதிய உத்திகள் செயல்படுத்தப்படும். நாட்டின் பிறப்பு விகிதம், இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டில் ஒன்று புள்ளி ஆறாக இருந்தது.

இது, இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டில், பூஜ்ஜியம் புள்ளி ஏழாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதியோர் நாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.