சட்டவிரோதக் குப்பை கிடங்குகள் மீது மாநில அரசு கவனம் செலுத்தும்

26 ஜனவரி 2026, 10:11 AM
சட்டவிரோதக் குப்பை கிடங்குகள் மீது மாநில அரசு கவனம் செலுத்தும்

ஷா ஆலம், ஜூன் 26: பொது தூய்மை பிரச்சனை, குறிப்பாக சட்டவிரோதமாகக் கழிவுகளை அகற்றும் இடங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு மாநில நிர்வாகம் கவனம் செலுத்தும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டும் பகுதிகள் முற்றிலுமாக அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு இடத்திற்கும், குறிப்பாக ஹாட்ஸ்பாட்களுக்கு, நேரில் சென்று நடவடிக்கை எடுப்பேன் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பிரச்சனையிலிருந்து சிலாங்கூர் விடுபட முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

“KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) குழுவிற்கும் ஊராட்சி மன்றங்களுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட ஒரு நல்ல உறவு உள்ளது என்றார்.

"நாங்கள் இனி விட்டுக்கொடுக்க முடியாது. மற்ற தரப்புகளைக் குறை கூறினால், பிரச்சனையை எவ்வாறு தீர்க்க முடியும்? அனைவரும் ஒரு குழுவாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்," என்று 2026 புத்தாண்டு உரையில் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.